டார்ச்சர் செய்த நாய்.. உரிமையாளருக்கு சரமாரி அடி உதை

75பார்த்தது
ஹைதராபாத்தில் ஸ்ரீநாத் என்பவர் வெளிநாட்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய், எதிர் வீட்டிற்குள் சென்று சிறுநீர், மலம் கழித்து வந்துள்ளது. இதனால், எதிர் வீட்டுக்காரர் தனஞ்ஜெய், ஸ்ரீநாத்திடம் புகார் செய்துள்ளார். ஆனால், தொடர்ந்து நாய் எதிர்வீட்டுக்குச் சென்றுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தனஞ்ஜெய் கடந்த மே 14ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீநாத்தை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து மதுராநநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி