இன்றைய ராசிபலன் 20-07-2023

82304பார்த்தது
மேஷம்: இன்று பொறுமையான அணுகுமுறை உங்களுக்குத் தேவை. திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணியிட சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. கணவன் - மனைவிக்கு இடையே வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வெளியூர் பயணத்தின் போது சில இழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிஷபம்: இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்களை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். கையில் பணம் போதுமானதாக இருக்கும். முதலீடு போன்றவற்றை இன்று தொடங்கலாம். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். மிதுனம்: சிறப்பான ஒரு நாளாக இன்றைய நாள் உங்களுக்கு அமையாது. சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். முதியவர்களுக்கு மூட்டு மற்றும் முதுகுவலி காணப்படும். மன அமைதிக்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். கடகம்: இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிடுவது நல்லது. நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிம்மம்: இன்று உங்களுக்கு சகோதரன், சகோதரி ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கன்னி: உங்களின் தாயிடம் உங்களுக்கு இருந்த வந்த சண்டை நீங்கும். நண்பர்களிடம் கொடுத்த பணம் திருப்பி வரும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். துலாம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பான மன நிலையில் காணப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு நிதி நிலைமை முன்னேற்றகரமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் அதிகமாக இருக்கும். தொலைபேசி மூலம் நல்ல செய்தி வந்து சேரும். விருச்சிகம்: மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த முயற்சிகளை எடுக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்லவும். தனுசு: இன்று உங்களுக்கு மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். காதலர்கள் திருமணத்திற்கான முயற்சிகளை தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மகரம்: இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படும். பணியிடத்தில் தேவையில்லாமல் அடுத்தவர்கள் வேலையில் தலையிட வேண்டாம். கும்பம்: இன்று உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பாராத சில பயணம் மூலம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு இன்று பணவரவிற்கான வாய்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். மீனம்: வீட்டில் பெற்றோரிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் முனைவோருக்கு வியாபாரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். குடும்ப உறுப்பினர்களால் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரித்துக் காணப்படும்.

தொடர்புடைய செய்தி