மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். மேலும், உணர்ச்சி வசப்படுதல் தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களை திட்டமிட்டு ஆற்றுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கையான நிலை காணப்படும். இதனால் எளிதில் வெற்றியடையலாம். பயனுள்ள
முடிவுகள் எடுப்பது உங்களுக்கு இன்று மிகவும் நல்லது. பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். சிறந்த திட்டமிடல் வேண்டும். உறுதியை வெளிபடுத்த வேண்டும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம் இது.
கடகம்: இந்த ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்கும். இழந்தது போன்ற உணர்வு காணப்படும். ஆனால், கவலைப்படத் தேவையில்லை. நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் இன்று தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களை ஆற்றுவதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கன்னி: இந்த ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்கை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியமான
முடிவுகள் இன்று எடுக்கலாம். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். ஈடுபடும் விஷயங்களில் வெற்றியும், நிதி வளமும் இருக்கும்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் மேம்படும் நாள். சுமகமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று இறை வழிபாடு, ஸ்லோகம் மந்திரத்தின் மூலம் மன ஆறுதல் மற்றும் திருப்தி பெறலாம். இன்று உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அவற்றை திட்டமிடுங்கள். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் இல்லை. முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்களைப் பராமரிப்பதன் மூலம் நீங்கள் விரும்பியபடி செயலாற்றலாம். பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள்.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான
முடிவுகள் இன்று பலனளிக்கும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி உங்கள் செயல்களில் வெற்றி பெறலாம். உங்கள் பொறுப்புகளை திறமையாக செய்வதே உங்களின் இன்றைய குறிக்கோளாக இருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.
மீனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உறுதியுடன் இருக்க வேண்டும். கவனமுடன் அணைத்து பணிகளிலும் செயலாற்ற வேண்டும். தைரியமாகவும் துணிவாகவும் இருக்க முயற்சி செய்ய வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.