இன்றைய ராசிபலன் (24-07-2023)

89683பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பண வரவு போதுமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். ரிஷபம்: இன்று நீங்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். இன்று மிகவும் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். நிதிநிலை சாதகமாக இருக்காது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிலருக்கு பல் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மிதுனம்: இன்று நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பணிகள் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். கணவன் - மனைவிக்கு இடையே சில சண்டைகள் ஏற்படும். சிலருக்கு வயிற்று வலி ஏற்படும். தியானம் மேற்கொள்வதும் பிரார்த்தனை செய்வதும் உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். கடகம்: இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக காணப்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உங்களின் பழைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிம்மம்: வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சகோதரன், சகோதரி உடன் சண்டைகள் ஏற்படும். உங்கள் பிரியமான ஒருவரின் உடல் நலத்திற்காக திடீர் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கன்னி: இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் கடினமாக உழைத்தாலும் உங்கள் பணிக்கு அங்கீகாரமும் நற்பெயரும் கிடைக்காது. சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். துலாம்: இன்றைய நாள் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணத்தை சிக்கனமாகக் கையாள வேண்டும். சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு உணவில் கவனம் தேவை. உங்களுக்கு பிடித்தமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருச்சிகம்: இன்று நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வேலையிடத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். கணவன் - மனைவி இடையே அனுசரித்துச் செல்ல வேண்டும். உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக நீங்கள் துடிப்புடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். தனுசு: உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். சிலருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். மகரம்: மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் செயல் பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது யோசித்து எடுக்கவும். முடிந்தவரை கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் விரயங்கள் ஏற்படும். உங்கள் மனதில் குழப்பங்கள் நிறைந்து காணப்படும். கும்பம்: இன்று உங்களுக்கு உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். இன்று பழப்புழக்கம் அதிகமாக காணப்படும். சிலருக்கு செரிமானம் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும். மீனம்: அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

தொடர்புடைய செய்தி