மேஷம்: இன்று உங்களுக்கு உற்சாகமான ஒரு நாளாக அமையும். புதுப்புது நிறைய வாய்ப்புகள் அமையும். முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பீர்கள். உங்களின் ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: இன்று கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணத்தை நிர்வகிக்கும் போது கவனமாக இருங்கள்.
மிதுனம்: இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்த சகோதரன் வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.
கடகம்: இன்று உங்களின் கனவு நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து மகிழ்ச்சி செய்தி வந்து சேரும். கணவன் - மனைவி இடையே இருவருக்கும் இடையே நல்லுறவு வளரும். உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல வெகுமதி கிடைக்கும். மன அமைதிக்கு ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம்: இன்று பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறருடன் பேசும் போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து பேச வேண்டும். அலுவலக ரீதியாக முக்கிய
முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
கன்னி: இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். தேவையான விஷயங்களுக்கு பணம் செலவு செய்வது நல்லது. சாதுர்யமாக பணத்தை செலவு செய்யுங்கள். எதற்கும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். மன அமைதிக்கு முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
துலாம்: இன்று நீங்கள் அனைத்தையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம். கிடைக்கும் பணத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிலருக்கு நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். முதியவர்களுக்கு கால் வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.
தனுசு: தனுசு ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் ஆறுதல் தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வியாபாரம் போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உங்களின் கனவுகள் நிறைவேறும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கி வந்து சேரும்.
மகரம்: இன்று வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
முடிந்தவரை உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்து வந்தாலும் அது சரியாகிவிடும். உங்களின் மன அமைதியை பாதிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
கும்பம்: நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டு தைரியமாக சவால்களை எதிர் கொள்ள வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும், முடிந்த அளவு சேமிப்பதன் மூலம் எதிர்கால பாதுகாப்பு கிடைக்கும். பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும். மனதில் உற்சாகமும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆன்மீக பயணமும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்: இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். திருமணம் பேச்சுவார்த்தை உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகமாக இருப்பினும், செலவுகளும் சற்று அதிகமாக இருக்கும். எந்தவிதமான ஆரோக்கியக் குறைபாடும் இருக்காது. காதலர்களுக்கு சிறப்பான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும்.