இன்றைய ராசிபலன் 29-11-2023

65610பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சிக்கனத்துடன் இருக்க வேண்டும். ரிஷபம்: செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். மிதுனம்: புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். இருப்பினும் இன்று உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாள். கடகம்: நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகிட்டும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் என்றாலும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமாகும் என்பதால் எந்தவித கவலையும் தேவையில்லை. பெற்றோர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சிம்மம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடித் தரும். தேவையற்ற பேச்சுகளால் சண்டை வரும் என்பதால் பேச்சில் மட்டும் பொறுமை தேவை. கன்னி: இன்று உங்களுக்கு குடும்பத்தினர் பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவுக்கும் வாய்ப்புண்டு. இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும். துலாம்: சிலர் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளுக்காக கடினமாக உழைக்க வேண்டி வரும். குலதெய்வ கோயிலுக்கு செல்வதில் சில தடங்கல் ஏற்படும். பணவரவு ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். விருச்சிகம்: உங்களின் செயல்கள் இன்று வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். செலவுகளுக்குத் தேவையான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படும். தனசு: உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பணம் விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். மகரம்: இன்று உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாள். மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் கவனம் தேவை. யாரோடும் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையும். கும்பம்: இன்று உங்களுக்கு நம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு வீட்டிலும் வெளியிலும் பாராட்டு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மீனம்: இன்று உங்களுக்கு முற்பகலில் சோர்வும் குழப்பமும் நீடிக்கும். பிற்பகலில் தெளிவும் சுறுசுறுப்பும் உண்டாகும். குடும்பத்தினர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மந்தமாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் நேரலாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி