இன்றைய ராசிபலன் 28-09-2023

68892பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய பலன்கள் திருப்தி அளிக்காது. இதனால், ஆன்மீக காரியங்களில் இன்று ஈடுபடுவது நல்லது. பக்திப் பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் உண்டாகும். இதனால் உங்களுக்கு அமைதி கிடைக்கும். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். முக்கிய முடிவுகளால் இன்று நல்ல பலன் தரும். அதிர்ஷ்டம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. கவனமாக இருப்பது நல்லது. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடம் அதிர்ஷ்டம் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் இன்று நல்ல நாள். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். தடைகளை சமாளித்து நன்மை காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று நீங்கள் தவிர்க்க வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிய கவலைகளை தவிர்க்கவும். சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெறுமை உணர்வு ஏற்படும். வேதனை தரும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சமநிலை இழப்பீர்கள். திரைப்படம் பார்த்தல் அல்லது இசை கேட்டல் போன்ற நிகழ்சிகளின் மூலம் ஆறுதல் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செழிப்பான நல்ல நாள். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக முடிப்பீர்கள். அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றகரமான பலன்கள் ஏற்படும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமையுடன் இருக்க வேண்டும். திறம்பட திட்டமிட வேண்டும். இறைவழிபாடு ஆறுதலை பெற்றுத் தரும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நன்மை. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகளை சமாளிக்க வேண்டும். இதனால், இன்று நீங்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நல்ல நாள். உங்கள் முயற்சியினால் இன்று எளிதாக வெற்றி காணலாம். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சாதகமான நேரம். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வளர்ச்சிப் பாதையில் பல தடைகள் காணப்படும். என்றாலும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடினமான சூழ்நிலை ஏற்படும். இன்று திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பண வரவு மகிழ்சிகரமாக இருக்காது.

தொடர்புடைய செய்தி