மேஷம்: புதிய பொறுப்புகளை திட்டமிட்டு குழப்பமில்லாமல் ஏற்றுக்கொள்வீர்கள். பணியிடங்களில் பாராட்டும்
பதவி உயர்வும் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடர்பாடுகள் நீங்கும். குடும்பத்தில் திருமணத் தடைகள் நீங்கி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்: வீட்டில் உள்ளவர்கள் மரியாதை குறைவாக பேசுவதால் மனம் நொந்து போவீர்கள். ஆவேசமான வார்த்தைகளை விடாதீர்கள். தொழிலுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிலர் தொண்டை வலியால் அவதிப்படுவீர்கள். வலியச் சென்று தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். மனைவியின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்: தேடிப் போனவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைவீர்கள். குறுக்கு வழியில் இறங்கி அவமானப்படாதீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய உதவி தாமதமாவதால் தொழிலை விரிவுபடுத்த தயங்குவீர்கள். அரசாங்க வேலைகளில் சுணக்கத்தை எதிர் நோக்குவீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
கடகம்: திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் திறமையை அனைவருக்கும் உணர்த்துவீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசியால் திருமண பேச்சை தொடங்குவீர்கள். காதலர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்று அமையும்.
சிம்மம்:
வேலை இடத்தில் இருந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். காலில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கடுமையான போட்டியை சந்திப்பீர்கள். கல்வியாளர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.
கன்னி: நண்பர்களுக்காக நெருங்கிய உறவினர்களை பகைத்துக் கொள்வீர்கள். தேடிவரும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தாதீர்கள். கோபத்தை முடிந்தவரை கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை தீர்ப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள்.
துலாம்: வேண்டாத வாக்குவாதங்களை தவிர்த்து குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக பணி செய்வீர்கள். பைனான்ஸ் தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வீர்கள். வீண் செலவு எதையும் செய்யாதீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம்: வீட்டை புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள். சுப காரியங்கள் சுணக்கமின்றி நடக்க குலதெய்வ நேர்த்தி கடனை பூர்த்தி செய்வீர்கள். பணப்பற்றாக்குறை மாறி பொருளாதாரம் மேம்பாடு அடையும். தொழிலில் சீரான வளர்ச்சி காண்பீர்கள். பரம்பரை வியாபாரத்தில் நல்ல பலனைப் பார்ப்பீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்படுவீர்கள்.
தனுசு: எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை விலக்கி விடுங்கள். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பை அடைவீர்கள். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மன அமைதிக்கு கோயிலுக்கு சென்று வருவது நல்லது.
மகரம்: தடையில்லாமல் முன்னேற முழுமையாக முயற்சி செய்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அமோக லாபத்தை அடைவீர்கள். கட்டுமான தொழிலில் கை நிறைய சம்பாதிப்பீர்கள். விவசாயத்தில் இறங்கி நெல் உற்பத்தியை பெருக்குவீர்கள். குறித்த நேரத்தில் கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
கும்பம்: அலுவலகத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால் அவமானப்படுவீர்கள். ஆசை வார்த்தைகளில் மயங்கி பணத்தை இழப்பீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். திருமணத்திற்காக பெண் பார்க்கும் வேலையை தொடங்குவீர்கள். சிறு வாகன விபத்தில் சிக்குவீர்கள். சொத்து பிரச்சனைக்காக கோர்ட் வாசல் ஏறும் சூழல் உண்டாகும்.
மீனம்: வறட்டுக் கவுரவம் பார்த்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நிகழ்த்துவீர்கள். பூர்வீகச் சொத்து வழக்கில் விட்டுக்கொடுத்து போவீர்கள். மனதிலிருந்த இனம் தெரியாத பயத்தை விலக்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியை கொண்டு வருவீர்கள். மூன்றாம் நபரை நம்பி புதிய முதலீடுகள் செய்தால் நஷ்டப்படுவீர்கள்.