மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று அணைத்திலும் வாக்குவாதம் எற்பட வாய்ப்புள்ளதால் உரையாடத் தொடங்குமுன் முறையாக யோசிக்க வேண்டும். வெளிப்படையான, அனுசரணையான அணுகுமுறை தேவை. எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு வழி காட்டும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம்.
கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சில பதட்ட நிலை ஏற்படும். இன்று நீங்கள் மூளைக்கு சிறிது ஓய்வு கொடுப்பதன் மூலம் சிறந்த முடிவை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சி குறைந்து காணப்படும். இன்று உங்களுக்கு தேவையற்ற கவலைகளால் வருத்தம் ஏற்படும். அத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நல்ல நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய இன்றைய நாள் சிறப்பான நாள். இன்று நீங்கள் சிறந்த திட்டங்கள் மூலம் பயன் பெறுவீர்கள். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். திரைப்படம் மற்றும் சீரியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்: இந்த ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்கும். அனுபவ அறிவு நல்ல ஆறுதலை அளிக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பதட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது. வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும்.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சில சவால்கள் எழ வாய்ப்புள்ளது. இன்று பாதுகாப்பின்மை காணப்படும். இது உங்கள் மகிழ்ச்சியை கெடுக்கும். ஆன்மீக ஈடுபாடு வெற்றியை அளிக்கும். மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான நாள். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுய முன்னேற்றத்திற்க்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகள் எளிதாக இருக்கும். நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.
மீனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் உங்கள் நலத்திற்காக இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் இன்றைய நாளை சுமூகமாக்கலாம். வருவதை அப்படியே எதிர்கொள்ளுங்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.