மேஷம்: இந்த ராசிக்காரர்கள் இன்று தேவையில்லாமல் அதிக பணத்தை செலவு செய்யக்கூடும். பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்துங்கள். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் மனைவியுடன் சண்டை ஏற்படும். சிலருக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும்.
ரிஷபம்: இன்று தேவையில்லாமல் அலுவலகத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்களின் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பணிகளை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். உங்களின் அன்புக்குரியவர்களால் உங்களின் மன அமைதி பாதிக்கப்படும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நிம்மதியை தேடித் தரும்.
வேலை இடத்தில் திறமை வெளிப்படும். போட்டி சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமாகும். உடனிருப்பவர்கள் பற்றி புரிதல் ஏற்படும்.
கடகம்: இன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணியிட மாற்றத்தால் ஆதாயம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். சிலருக்கு கண் தொடர்பான பிரச்னை வரும். எதிர்காலம் சம்மந்தமான முக்கிய முடிவை எடுக்கும் சூழல் உண்டாகும்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் உங்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறிப்பாக தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் மன அமைதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மன அழுத்தத்தையும், கவலையையும் உண்டாக்கும். உங்களுக்கு
வேலை கிடைப்பதில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். தம்பதிகள் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிலருக்கு நினைத்த காரியங்களில் தாமதம் ஏற்படும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான பிரச்னைகளில் உங்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும்.
துலாம்: நீண்ட நாட்களாக வரவேண்டிய கடன் பாக்கி இன்று உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்ளுக்கு நஷ்டம் ஏற்படலாம், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். சிந்தனையில் இருந்த குழப்பம் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்: உங்களின் நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். காதலர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். தேவையில்லாமல் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். ஆடம்பர விஷயத்தை தவிர்க்கவும். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
தனுசு: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சியான மனநிலை உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சகோதரன் அல்லது சகோதரி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் உங்களுக்கு இன்று மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடை குறையும். சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு இன்று அனைத்து பண பிரச்னைகளும் சரியாகிவிடும். இதன் மூலம் உங்களுக்கு இருந்து வந்த பல பிரச்னைகள் உடனடியாக நீங்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை குறையும். சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கும்பம்: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களால் உங்களின் நிம்மதி பாதிக்கப்படும், மேலும் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமாக சூழல் அமையும்.
மீனம்: இன்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தையின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் கிடைக்கும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.