மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று நீங்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது. அதே சமயம் குடும்ப சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் ஒற்றுமை வலுப்படும்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களிடம் நம்பிக்கைப் போக்கு காணப்படும். உங்கள் முயற்சி மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேற்படிப்புக்கு பெறலாம்.
கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதனால் திருப்தி ஏற்படும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சில சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்தையும் எளிதாக மற்றும் கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாக்குவாதம் மற்றும் வதந்திகளில் ஈடுபட வேண்டாம். ஆசிரியர்கள் பங்களிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல்களையும் பெறலாம். தாய் அல்லது சொந்தக்காரர்கள் உடல் வலியை அனுபவிப்பார்கள்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று இலக்குகளை அடைவதற்கு நல்ல நாள். இன்று எதிர்பாராத நன்மைகள் நேரலாம். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.
துலாம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்களின் முக்கியமான செயல்களை இன்று முடிக்க முடியாது. உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டால் வெற்றி அடையலாம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். சிறப்பு ஆடை பரிசுகளைப் பெறுங்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பிரார்த்தனை மற்றும் தியானம் செய்தால் ஆறுதலாக இருக்கும். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நன்மை.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிச்சயமற்ற தன்மையை உணர்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கான பலனில் நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். அமைதியாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனைத்தும் சுமூகமாக நாடாகும். நம்பிக்கை உணர்வு உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு
வேலை கிடைக்க சாதகமான நேரம்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் மனதில் சில இலக்குகளை கொண்டிருப்பீர்கள். இதற்க்காக செயலாற்றினால் அதனை எளிய வழியில் அடையலாம். பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும்.
மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்ட மன நிலை ஏற்படும். சிறிய விஷயங்களைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு சாதகமான பணிச்சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.