இன்றைய ராசிபலன் 19-09-2023

73549பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று நல்ல நாள். நீங்கள் நேர்மறை எண்ணங்களை இன்று வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இன்று அதிகமாக உள்ளது. தெய்வ ஆசிர்வாதத்திற்கு அர்ச்சனை செய்வது நல்லது. அதே சமயம் குடும்ப சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. அதனால், சூழ்நிலைபுரிந்து புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் மோதல் ஏற்படலாம். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். உங்கள் நண்பர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து மகிழ்ச்சியாக இருக்க நல்ல நேரம். உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து முடிப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் அணுகுமுறையில் வன்மையை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருந்தால் நல்லது. நிறைவேறாத உங்களின் ஆசைகளுக்காக வருத்தப்பட வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எந்தச் செயலிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். நீண்ட பயணங்களால் கூடுதல் செலவுகள் மற்றும் மன உளைச்சல் ஏற்படும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் தொடர் முயற்சி மூலம் இன்று வெற்றி காணலாம். உங்கள் நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனைக் காண இன்று கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவார்கள். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொண்டால் நல்லது. பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொடர்பாடலை கட்டுப்படுத்த வேண்டும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்காம்ல் உங்கள் வளர்ச்சி பாதிக்கும். இன்று நீங்கள் மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். ஜல தோஷம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சினை அல்லது மனக் குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மனநிலை உங்களிடம் இருக்காது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். கடின உழைப்பின் மூலம் தான் வெற்றி காண முடியும். பணியிடத்தில் சமயோசித புத்தியை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி