இன்றைய ராசிபலன் 18-11-2023

66222பார்த்தது
மேஷம்: இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள். உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் பிறரை வெல்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள். பணியில் உங்கள் செயல்திறனுக்கு அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ரிஷபம்: இன்று இறுக்கமான பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள். பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இது உங்களுக்கு கவலையை அளிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க கட்டுப்பாடுடன் செலவு செய்ய வேண்டும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மிதுனம்: இன்று உங்களின் பொறுமை சோதனைக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போராட வேண்டும். உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கடகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். நற்பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் தொடர் முயற்சியால் இது சாத்தியம் ஆகும். இன்று அதிக பண வரவு இருக்கும். அந்தப் பணத்தை நீங்கள் ஆன்மீக நோக்கத்திற்கு பயன்படுத்தலாம். இன்று உங்கள் மன உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிம்மம்: அலுவலகத்தில் கவனத்துடன் செயல்படுவதன் மூலம் தவறு நடப்பதை தவிர்க்கலாம். சிலருக்கு தோள் மற்றும் கை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அணுகுமுறையில் கவனம் வேண்டும். இன்று சாதகமான பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். கன்னி: தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். துலாம்: வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். சரியாக திட்டமிடுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். அதனால் சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். விருச்சிகம்: தேவையற்ற செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு வலி வந்து நீங்கும். சவால் மிகுந்த நாளாக இன்று இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும். பொறுமையுடன் செயல்படவும். திட்டமிட்டு பணியாற்றினால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். தனுசு: கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படும். பணவரவு எப்போதும் போல் காணப்படும். சில நெருக்கடியான சந்தர்ப்பங்களை சந்திக்க நேரிடும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை வரலாம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியை செய்தால் சரியாக இருக்கும். எதிலும் ஆர்வமின்மையுடன் காணப்படுவீர்கள். மகரம்: சேமிப்பு அதிகமாகவும் அளவிற்கு பணவரவு அதிகமாகும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். முயற்சிக்கான பலன் வந்து சேரும். கடினமான பணியை எளிதில் முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனம் அமைதியாக காணப்படும். கும்பம்: இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். பணத்தேவை பூர்த்தியடையும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடப்பதால் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். மீனம்: இன்று நீங்கள் மன சோர்வுடன் காணப்படுவீர்கள். தொடை வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது. முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். உணர்ச்சியை வெளிப்படுத்துவன் மூலம் தம்பதிகள் நெருக்கமாக உணர்வார்கள். பணியில் தவறு நடக்காமல் இருக்க கவனமாக செயல்படுங்கள்.

தொடர்புடைய செய்தி