மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள் . கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய
முடிவுகள் எடுக்க உகந்த நாள். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடிவர வாய்ப்புள்ளது.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் இன்று நீங்கள் சுய வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபட ஏற்ற நாள். என்றாலும் இன்று முக்கிய
முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்வார்கள். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை.
மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதற்கு உகந்த நாள். இன்று பிரார்த்தனை மேற்கொள்வது மற்றும் இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும். இந்த நாட்டங்கள் தான் நீங்கள் விரும்பும் ஆறுதலை உங்களுக்கு பெற்றுத் தரும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம்.
கடகம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் திறமையான தொடர்பு மூலம் நல்ல பலன்களைக் காண முடியும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் மந்திர உச்சாடனம் செய்வது ஆன்மீக சொற்பொழிவுகள் கேப்பதன் மூலம் சிறப்பாக உணரலாம். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடினமான சவால்கள் காணப்படும். நீங்கள் திறமையாக கையாள வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும். முக்கிய
முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. ஆசிரியர்கள் பங்களிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல்களையும் பெறலாம். தாய் அல்லது சொந்தக்காரர்கள் உடல் வலியை அனுபவிப்பார்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கவலைக்கு ஆளாகலாம். இதனால் உங்கள் அடிப்படை பணிகளைக் கூட உங்களால் செய்ய இயலாது. சகஜமான அணுகுமுறை தேவை. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். திரைப்படம் மற்றும் சீரியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை தேவை. மனதில் குழப்பத்திற்கு ஆளாகாதீர்கள். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும் வகையிலான நற்பலன்கள் காணப்படும்.பிறருடன் சுமூகமாகப் பழகுவது நன்மை தரும். வாழ்வின் நன்மைகளையும் தீமைகளையும் நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும்.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மகிழ்வைத் தரும். இன்று செயல்கள் சமூகமாக நடைபெறாது. புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவார்கள்.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்காது. தைரியம் குறைந்து காணப்படும். என்றாலும் நம்பிக்கையுடன் தைரியமான மன ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். இன்று குறைந்த எதிர்பார்ப்புடன் காரியம் ஆற்றினால் அதற்குண்டான வெகுமதி கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.
மீனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறை காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல உறவை பராமரித்து உங்கள் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தவரின்நல்லுறவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு சாதகமான பணிச்சூழல் ஏற்படும்.