மேஷம்: இன்று தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் முன் கவனமாக இருங்கள்.
ரிஷபம்: இன்று சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவு தாராளமாக இருக்கும். பெண்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. சிலருக்கு குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வர வாய்ப்பு ஏற்படும். காதலில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும்.
மிதுனம்: இன்று உற்றார் உறவினர் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும். கணவன் - மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். அடுத்தவர்களுடன் பழகும்போது கவனமுடன் பழக வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்: இன்று நீங்கள் நாள் முழுவதும் பதற்றத்துடன் இருப்பீர்கள். வியாபார ரீதியாக புதிய முயற்சிகள் அனுகூலமாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வயதில் உள்ள ஆண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
துலாம்: இன்று கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இருசக்கர வாகத்தில் வெளியே செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் தாமதமாகும். கையில் பணம் இல்லாததால் கடன் வாங்கும் சூழல் உருவாகும்.
சிம்மம்: இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஏதாவது ஒரு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்படும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். தேவையற்ற டென்ஷன், அலைச்சல் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான சூழல் அமையும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும் சூழல் உருவாகும்.
விருச்சிகம்: இன்று பணம் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்
வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழல் உருவாகும்.
தனுசு: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் - மனைவி இடைய மன வருத்தம் ஏற்படலாம். புதியவர்களுடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு புதிய சவால்கள் ஏற்படும்.
மகரம்: வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய பிரச்னைகள் ஏற்படும். இன்று நீங்கள் வீட்டில் எதையும் அனுசரித்து செல்வது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் திடீர் செலவுகள் ஏற்படும்.
கும்பம்: இன்று பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
வேலை தேடி கொண்டிருந்தவர்களுக்கு
வேலை கிடைக்கும்.
மீனம்: இன்று கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் அதிக அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும்.