இன்றைய ராசிபலன் 13-09-2023

73238பார்த்தது
மேஷம்: இந்த ராசிக்காரர்கள் இன்று தேவையில்லாமல் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்துங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை தாமதமாகும். அலுவலகத்தில் சுமூகமான சூழல் உண்டாகும். ரிஷபம்: இன்று தேவையில்லாமல் அலுவலகத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்களின் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள். முதியவர்களுக்கு உடல்நிலை சற்று பாதிக்கப்படும். வியாபாரிகளுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். உங்களின் அன்புக்குரியவர்களால் உங்களின் மன அமைதி பாதிக்கப்படலாம். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நிம்மதியை தேடித் தரும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும். கடகம்: இன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணியிட மாற்றத்தால் ஆதாயம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். சிலருக்கு கண் தொடர்பான பிரச்னை வரும். உறவினர்களால் உங்கள் குடும்பத்தில் சில சிக்கல் ஏற்படும். சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் உங்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறிப்பாக தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் மன அமைதி கிடைக்கும். மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். இது உங்களுக்கு மன அழுத்தத்தையும், கவலையையும் உண்டாக்கும். மாணவர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். கன்னி: இந்த ராசிக்காரர்கள் பணம் தொடர்பான பிரச்னைகளில் உங்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் திடீர் பயணம் சாதகமான பலனைத் தரும். புதியவர்களுடன் பழகும் போது கவனமாக பேசுங்கள். துலாம்: நீண்ட நாட்களாக வரவேண்டிய கடன் பாக்கி இன்று உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்ளுக்கு நஷ்டம் ஏற்படலாம், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். வீட்டில் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விருச்சிகம்: உங்களின் நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். காதலர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். தேவையில்லாமல் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வீட்டில் பெற்றோரிடம் சண்டை போடுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். தனுசு: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சியான மனநிலை உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சகோதரன் அல்லது சகோதரி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் உங்களுக்கு இன்று மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மகரம்: நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு இன்று அனைத்து பண பிரச்னைகளும் சரியாகிவிடும். இதன் மூலம் உங்களுக்கு இருந்து வந்த பல பிரச்னைகள் உடனடியாக நீங்கும். உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை குடும்ப உறுப்பினர்களிடம் செலவிடுங்கள். காதலர்களுக்கு திருமணம் தொடர்பாக சில பிரச்னைகள் ஏற்படலாம். குரு பலன் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கும்பம்: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களால் உங்களின் மகிழ்ச்சி குறையும். இது உங்களுக்கு தேவையில்லாமல் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். நீங்கள் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம். இந்த ராசிக்காரர்களுக்கு உங்கள் ஆசைகளை நிறைவேற்ற இன்று அதிக நேரம் கிடைக்கும். மீனம்: மற்றவர்களை விமர்சனம் செய்வதற்கு முன் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களை சுற்றியுள்ளவர்களால் உங்களின் நிம்மதி பாதிக்கப்படும், இருப்பினும் வீட்டில் பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீண்டதூர பயணங்கள் உங்கள் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி