இன்றைய ராசிபலன் 12-12-2023

67057பார்த்தது
மேஷம்: நீங்கள் இன்று உங்களது தொழில் தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்களது உடல்நிலையில் தொய்வு இருந்தாலும் நீங்கள் நினைக்கும் செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். திருமண வாழ்க்கையை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்லது நடக்கும்.

ரிஷபம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் நினைத்ததை நடத்தி பாராட்டு பெரும் நாளாக இன்றைய நாள் அமையும். சாமி தரிசனத்துக்காக கோயில்களுக்கு பயணம் மேற்கொள்ளுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதால் பொன், பொருள், ஆடை வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது.

மிதுனம்: பணியில் இருப்பவர்கள் அதில் உள்ள பிரச்சனைகளை விலக்கி நீங்கள் அடைய வேண்டிய உயரத்தை அடைவீர்கள். உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும் நாளாக இந்த நாள் உள்ளது. தேவையில்லாத வாய் பேச்சை குறைப்பதன் மூலம் மன நிம்மதியை தக்கவைத்துக் கொள்ளலாம்.

கடகம்: விவசாயத்தில் இருப்பவர்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும். உங்களின் வாழ்க்கை துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு புதிய வெற்றிகளை பெறுவீர்கள். நிலம் வாங்கும் யோகமும் அதிகம் உள்ளது.

சிம்மம்: புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமானது உங்கள் வீடு தேடி வரும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெளியூருக்கு வெளிநாட்டிற்கும் செல்லும் பாக்கியம் கூட உண்டு.

கன்னி: கோவத்தை தவிர்த்து பேசுவது உங்களை நல்வழிப்படுத்தும். பிள்ளைகளுக்காக இன்று செலவு செய்ய நேரிடலாம். கல்வியில் ஈடுபாடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். படிப்பில் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள்.

துலாம்: சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அன்றாட வேலையை செய்வதில் எந்த தடையும் இருக்காது. தொட்டது துலங்கும் நினைத்தது நடக்கும் நாளாக இன்றைய நாள் உள்ளது. மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் குடும்பத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் செல்ல நேரிடலாம். பெண்கள் பேச்சு திறமையால் நினைத்ததை சாதிப்பார்கள்.

விருச்சிகம்: சிலருக்கு பல நாள் கனவான வீடு, வீட்டுமனை வாங்குவது என்ற கனவு நனவாகும். வாங்கிய கடன்கள் அடையும் தருவாயில் உள்ளன. மாணவர்கள் தாங்கள் படிப்பு விஷயத்தில் படு கெட்டியாக இருப்பார்கள். கல்வி தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

தனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் சற்று தொய்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கலில் வர வேண்டிய பணம் வந்து சேரும். தடைபட்ட சுப காரியங்கள் தடபுடலாக நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. தேவையான பணம் வீட்டிற்கு வந்து சேரும்.

மகரம்: வீட்டில் புதிய பொருட்கள், ஆபரணங்கள் வந்து சேரக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடம் கிடைத்து தங்களது குடும்பத்தோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கும்பம்: நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் தடையில்லாமல் கிடைக்கப்போவதால் தொழில் வளர்ச்சி அடையும். உங்களோட புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்பால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கக்கூடும். வாடிக்கையாளரை அனுசரித்து செல்வது வியாபாரத்திற்கு நல்லது.

மீனம்: கணவன் மனைவியாக இருப்பவர்கள் சண்டை சச்சரவுகள் இன்றி அன்பாக வாழ தொடங்குவீர்கள். பணவரவு உள்ளதால் தேவைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். நீங்கள் நினைத்தது நடந்தே தீரும். கூடுதல் உழைப்பு உங்களை வெற்றியடைய செய்யும். திருமணம் தொடர்பான உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும்.

தொடர்புடைய செய்தி