இன்றைய ராசிபலன் 11-10-2023

64263பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் செய்ய நினைத்த காரியங்களில் சிறிய தாமதம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, மனை, வாகனம் போன்ற விஷயங்கள் சாதகமாக முடியும். உங்கள் எதிரிகள் கூட பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ரிஷபம்: இன்று தொழில், வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். மிதுனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. கடகம்: இன்று பொருள்வரத்து அதிகரிக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். உடனிருப்பவர்கள் ஆதரவு தருவார்கள். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். தூரத்திலிருந்து உறவினர்கள் இல்லத்திற்கு வந்து போவார்கள். மனைவியுடன் விட்டுக் கொடுத்து போவது மனதிற்கு நிம்மதியைத் தரும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கன்னி: இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும். துலாம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். அதேசமயம், பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். வேலையில் நிம்மதி உண்டாகும். தாய் தந்தையரின் அன்பு கிட்டும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். விருச்சிகம்: இன்று எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே நன்கு நடந்து முடியும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டி இருக்கும். தனுசு: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். பிள்ளைகளால் மனதில் நிம்மதி உண்டாகும். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். மகரம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சீரான பண வரவு இருக்கும். நண்பர்களால் இல்லத்தில் மனக் கசப்பு ஏற்படலாம். கும்பம்: இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து பின் எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்றுங்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மீனம்: இன்று வீண் பிரச்னைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தால் திருமண தடை நீங்கும்.

தொடர்புடைய செய்தி