இன்றைய ராசிபலன் 10-10-2023

78802பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று சவால்களை சந்திக்க அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்டுதலை தவிர்க்க வேண்டும். அமைதியுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாய்ப்புள் தேடிவர ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மிதமான வளர்ச்சி ஏற்படும். பொறுமையும் உறுதியும் இருந்தால் இலக்கில் வெற்றியடையலாம். நேரமின்மையால் வேலையில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் வேலையில் தவறு செய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக செய்யப்பட வேண்டும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ஆசைகள் நிறைவேறும் நாள். இன்று மன அமைதியுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். வேலைகள் சுமுகமாக நடக்கும். உங்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதோடு, பணியில் உங்களின் செயல்திறனுக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதிற்குள் டென்ஷன் அதிகமாக இருக்கும். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முக்கிய முடிவுகள் எடுப்பது, புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பிரார்த்தனையும் தியானமும் ஆறுதல் தரும். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள். சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியாக இருக்க நல்ல நாள் அல்ல. ஆன்மிகப் பயணங்கள் ஆறுதல் தரும். இன்றைய சவால்களை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கன்னி: இந்த ராசிக்காரர்கள் இன்று சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க நிறைய பொறுமை தேவை. நம்பிக்கையுடன் செயல்படுங்கள், முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான முடிவுகள் எடுக்க நல்ல நாள். முன்னேறுவதற்கான வலிமையும் உற்சாகமும் உங்களுக்கு இருக்கும். இன்று எல்லா வகையிலும் செழிப்பாக இருக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு ஞானத்தை தரும். இதனால் கடினமான சூழ்நிலைகளை எளிதில் கையாளுவீர்கள். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மந்தமாக இருக்கும். நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். எதையும் இலகுவாக எடுத்துக் கொண்டால், அதில் நல்ல பலன்களை காணலாம். மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை குறைந்து நம்பிக்கையின்மை இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சி காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் பல உற்சாகமான தருணங்களை அனுபவிப்பீர்கள்.ஒரு புதிய கட்ட வளர்ச்சியைக் காண்பீர்கள். திட்டமிட்டு உழைத்து எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி