மேஷம்: நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம்.
ரிஷபம்: மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். இன்று நிதி வாழ்க்கையில் செழிப்பு இருக்கும். இதன் மூலம், நீங்கள் இன்று கடன்களிலிருந்து விடுபடலாம். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார்.
மிதுனம்: வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் - அது வேலையில் கவனத்தை பாதிக்கும். உங்கள் வீட்டு உறுப்பினரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பித் தரவும், இல்லையென்றால் அவர் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். வீட்டை அழகுபடுத்துவதுடன், குழந்தைகளின் தேவைகளையும் கவனியுங்கள். குழந்தைகள் இல்லாத வீடு ஒழுங்காக இருந்தாலும் ஆன்மா இல்லாததைப் போன்றது.
கடகம்: கஷ்டங்களை சிந்தித்து அதைப் பெரிதாக நினைப்பதால் உங்களின் தார்மிக நம்பிக்கை பலவீனமடையும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் - ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள்.
சிம்மம்: உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக ரத்த அழுத்த நோயாளிகள். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையின்றி உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் எந்த வேலையும் இன்று செய்ய வேண்டாம். உறவினர்கள் / நண்பர்கள் வந்து மாலை நேரத்தை அற்புதமானதாக ஆக்குவார்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும்.
கன்னி: சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். இன்று உங்கள் பணம் சேமிக்கும் முயற்சியில் வெற்றிபெற மாட்டிர்கள், இருப்பினும் நீங்கள் இவற்றை எண்ணி கவலை பட வேண்டாம் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக சீக்கிரமாக மாறக்கூடும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது.
துலாம்: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இன்று, பணம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நீங்கள் கவலைப்படலாம். இதற்காக, உங்கள் நம்பிக்கையான ஒருவரை நீங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும்.
விருச்சிகம்: புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள். அது உங்கள் உடலை திடமாக வைத்திடும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது.
தனுசு: சுற்றியுள்ளவர்கள் அதிகம் எதிர்பார்ப்பதை உணர்வீர்கள் - உங்களால் இயலக் கூடியதற்கு அதிகமாக வாக்குறுதி தராதீர்கள் - மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் அதிகம் உழைக்காதீர்கள். இன்று நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும். இன்று உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் சில பெரிய மாற்றங்களை செய்வீர்கள். காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது.
மகரம்: உடல் வலிகளும் ஸ்ட்ரெஸ் தொடர்பான பிரச்சினைகளும் வரக் கூடும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். மனைவியின் விவகாரங்களில் தலையிடுவது அவருக்கு ஆத்திரமூட்டும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். இந்த ராசிக்காரர்கள் இன்று மக்களை சந்திப்பதை விட தனியாக அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள்.
கும்பம்: நிதானத்தை உரசிப் பார்ப்பதால் வாக்குவாதமும் மோதலும் ஏற்படும். ஊகங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள்.
மீனம்: அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார். டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம்.