மேஷம்: இன்று பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் நல்லது. தேவையில்லாத செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். உடன் பிறந்தவர்களிடம் சண்டை ஏற்படும். முடிந்தவரை இன்று பேச்சை குறைப்பது நல்லது.
ரிஷபம்: தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவார்கள். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
வேலை தேடுபவர்களுக்கு கவுரவமான
வேலை கிடைக்கும். உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மிதுனம்: இன்று தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம் தேவை. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச் செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும்.
கடகம்: இன்று வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் ஏற்படும்.
சிம்மம்: இன்று குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
கன்னி: இன்று மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருப்பது நல்லது. பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை. இருந்த போதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தொழில் தொடங்கலாம்.
துலாம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் உண்டாகும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் இருந்தால் பெரிய சிக்கல் ஏற்படும்.
விருச்சிகம்: இன்று இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழியில் லாபம் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள்.
தனுசு: இன்று சுயதொழில் புரியும் பெண்களுக்கு குறைவான லாபமே கிடைக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது.
மகரம்: இன்று அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்கலாம். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும்.
கும்பம்: இன்று உங்களுக்கு பிடிக்காத சில காரியங்கள் நடைபெறும். முடிந்தவரை அமைதியாக இருப்பது நல்லது. விவசாயிகள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.
மீனம்: இன்று வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.