இன்றைய ராசிபலன் 07-09-2023

81932பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று செய்யும் அணைத்து காரியங்களும் கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் அணுகுமுறையில் அமைதியுடனும் உறுதியாகவும் இருக்க வேண்டும். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியம். செயல்களில் தாமதம் நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம் மற்றும் நல்லது. இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை விரைந்து எடுப்பதற்கு இன்று நல்ல நாள். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள். சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அணைத்திலும் வெற்றி காண்பீர்கள். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். ஈடுபடும் விஷயங்களில் வெற்றியும், நிதி வளமும் இருக்கும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் ஒன்று கடவுள் வழிபாடு. திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். திரைப்படம் மற்றும் சீரியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். நேர்மறையான அணுகுமுறை தேவை. தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமநிலையுடன் இருக்கும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும். உங்களுடைய இலக்குகளும் இலட்சியங்களும் சற்று இலகுவாக இருக்க வேண்டும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அபாரமான நாளாக இருக்கும். உங்கள் தொடர்பாடல் திறமை மூலமாக உங்கள் பிரியமானவர்களின் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவார்கள். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையோ இழந்தது போல காணப்படும். சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க முயலுங்கள். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி காண்பது கடினம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துடிப்புடன் காணப்படும். வெற்றிக்கான முயற்சி செய்ய வேண்டும். திடமான சிந்தனையும் செயலாக்கமும் காணப்படும். வெற்றிக்கான உங்கள் முயற்சி ஜெயிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு சாதகமான பணிச்சூழல். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி