இன்றைய ராசிபலன் 05-12-2023

70106பார்த்தது
மேஷம்: முக்கிய முடிவுகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை தள்ளிப்போகும்.

ரிஷபம்: இன்று கணவன் - மனைவிக்கு இடையே புரிதல் மேம்படும். மனநிம்மதியுடன் இருப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருப்பதால் சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான பாராட்டு கிடைக்கும். பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். முயற்சிக்கான பலன் தரும் நாளாக இன்றைய நாள் அமையும்.

மிதுனம்: தேவையற்ற சிந்தனைகளால் மன உளைச்சல் உண்டாகலாம். நினைத்த காரியங்கள் முடிய தாமதமாகலாம். எந்த செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இதனால் தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும். தம்பதிகள் வெளிப்படையாக பேசி சமரசம் செய்து கொள்ளவும். பணவரவு தேவைக்கு ஏற்ப இருக்கும்.

கடகம்: தேவையற்ற செலவுகள் சேமிப்பை குறைக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒரு விதமான எரிச்சலான சூழல் அமையும். எனவே, பொறுமையாக இருப்பது நல்லது. பணியை சரியான நேரத்தில் செய்து முடிக்க இயலாமல் போகலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களிடத்தில் நல்லுறவு இருக்காது. நிதானமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவும்.

சிம்மம்: உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுவதன் மூலம் தவறு நடப்பதை தவிர்க்க முடுயும். தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு சற்று விலகி இருப்பார்கள். இதனால் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தோள் மற்றும் கை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அணுகுமுறையில் கவனம் வேண்டும். இன்று சாதகமான பலன் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் செய்வீர்கள். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.

துலாம்: உத்தியோகத்தில் சிறந்த பலன் கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். சரியாக திட்டமிடுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். அதனால் சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு தேவையற்ற செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு வலி வந்து நீங்கும். சவால் மிகுந்த நாளாக இன்று இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும். பொறுமையுடன் செயல்படவும். திட்டமிட்டு பணியாற்றினால் சிறந்தது. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு: கணவன் - மனைவி பொறுமையாக இருக்கவும். பணவரவு எப்போதும் போல் காணப்படும். சில நெருக்கடியான சந்தர்ப்பங்களை சந்திக்க நேரிடும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னை சிலருக்கு வரலாம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியை செய்தால் சரியாக இருக்கும். ஆர்வமின்மையுடன் காணப்படுவீர்கள்.

மகரம்: சேமிப்பு அதிகமாகும் அளவிற்கு பணவரவு இருக்கும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். முயற்சிக்கான பலன் வந்து சேரும். கடினமான பணியை எளிதில் முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அமைதியுடன் காணப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். பணத்தேவை பூர்த்தியடையும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடப்பதால் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

மீனம்: இன்று மிகவும் மன சோர்வுடன் காணப்படுவீர்கள். முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். உணர்ச்சியை வெளிப்படுத்துவன் மூலம் தம்பதிகள் நெருக்கமாக உணர்வார்கள். பணியில் தவறு நடக்காமல் இருக்க கவனமாக செயல்படுங்கள். முயற்சிக்கான பலன் கிடைக்க சற்று தாமதமாகலாம்.

தொடர்புடைய செய்தி