இன்றைய ராசிபலன் 05-01-2024

58536பார்த்தது
மேஷம்: இன்று நீங்கள் பாராட்டுகளைப் பெறும் நாள். லாபம் அதிகமாக இருக்கும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாறுதலும் கிடைக்கும். ரிஷபம்: இன்று சிக்கல்கள் தோன்றினாலும் அதில் வெற்றி அடைவீர்கள். செய்யும் செயல்களில் முழு திருப்தி கிடைக்கும். குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். புதிய சொத்துகள் சேரும். மிதுனம்: இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். யாருடனும் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். கடகம்: இன்று நாள் முழுவதும் தைரியமாக இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். சிம்மம்: இன்று வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணத்திற்குப் பெண் பார்ப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். தேவையில்லாத மனக்குழப்பங்கள் அகலும். கன்னி: இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியைத் தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். விருச்சிகம்: இன்று எதிர்பார்த்த பணவரவுகள் குறித்த காலத்தில் கிடைக்கப் பெறாது. உங்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். வேலைக்கு செல்லும் ஆண்கள் தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். தனுசு: இன்று சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எவரைப் பற்றியும் எதிர்மறை கருத்துக்களை வெளியிடாதீர்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படலாம். தற்செயலான விபத்துக்களை சந்திக்க நேரும். உணவு விஷயத்தில் கடும் எச்சரிக்கை தேவை. இரவு, அதிகாலை நேரங்களில் பயணங்களை தவிர்க்க வேண்டும். சாலைவழி உணவிடங்களில், நேரம் தாண்டி இரவு உணவு உட்கொள்ள வேண்டாம். மகரம்: இன்று குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். கும்பம்: இன்று பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும். தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். மீனம்: இன்று உடல்நிலை சீராகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த சண்டைகள் நீங்கும். அரசுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறுவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அதிகாரம், பதவியில் உள்ளவர்களின் ஆரோக்கியமான உதவிகள் கிடைக்கும். இதனால் பல வசதிகளை அடையலாம். எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். உடல்நிலை ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி