மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் யோசித்துப் பேச வேண்டும். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். துணையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டுப் பெரியவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
மிதுனம்: எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் சாமர்த்தியமாக நடந்துக்கொண்டு பாராட்டைப் பெறுவீர்கள். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
கடகம்: இன்று நீங்கள் பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். சகபணியாளர்களின் செயல் கோபத்தை ஏற்படுத்தலாம். எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்து வைப்பீர்கள்.
சிம்மம்: வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பத்திற்குத் தீர்வு கிடைக்கும். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.
கன்னி: பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக காரியங்கள் சாதகப் பலனைத் தரும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். இரவு நேர பயணத்தைத் தவிர்க்கவும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத செலவுகள் கவலையை உண்டாக்கும்.
துலாம்: அனைவரிடமும் நேர்மையாக நடந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும் நாள். உறவினர்களிடையே இருந்துவந்த பிரச்சனை நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை நம்பாமல் இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுத்தடித்த ஒரு காரியம் நடந்து முடியும்.
விருச்சிகம்: சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். கடின உழைப்பிற்கு உண்டான பரிசு கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை ஈஸியாக சமாளித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தனுசு: பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு சந்தோசத்தைத் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவியோடு இருந்த கருத்து வேறுபாடு விலகும்.
மகரம்: இன்று உங்களுக்குப் பணப்புழக்கம் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். நண்பர்களால் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.
கும்பம்: எதிர்பாராத அலைச்சல்கள் சோர்வை ஏற்படுத்தும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்துக் காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாகப் புதுப்பிரச்சனை தலைதூக்கும். முடிந்த வரை வாயைத் திறக்காமல் இருப்பது சிறப்பு. தந்தையிடம் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.
மீனம்: இன்று உங்களுக்குச் சவால்கள் நிறைந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. நண்பர்களிடம் இருந்த வந்த பிரச்சனை நீங்கி, ஒற்றுமை மேம்படும். முக்கிய
முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.