மேஷம்: இன்று நீங்கள் பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். பிள்ளைகள் தந்தையிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். பணியிடத்தில் சகபணியாளர்களின் செயல் கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே, எது பேசினாலும் வார்த்தையில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வரும்.
ரிஷபம்: இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு உண்டான பரிசு கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உருவாகும். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை சுலபமாகச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யலாம். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும்.
மிதுனம்: பணியிடத்தில் கீழ் பணிபுரிபவர்களால் பிரச்சனை வரலாம். எதிர்பாராத அலைச்சல்கள் சோர்வை ஏற்படுத்தும். சிலருக்கு எதிர் பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்துவந்த தடை தாமதம் விலகும். பிறருக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
கடகம்: பணியிடத்தில் பணிச்சுமை அதிகரித்துக் காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாகப் புதுப்பிரச்சனை தலைதூக்கும். முடிந்த வரை நீங்கள் அமைதியாக இருப்பது சிறப்பு. பயணம் செய்யும்போது பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சிம்மம்: நீண்ட நாள் மனதிலிருந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. திடீர் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
கன்னி: உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முக்கிய
முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சிலர் மனதிற்குப் பிடித்த இடத்திற்குச் செல்ல வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.
துலாம்: பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொள்வது நல்லது. பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவரால் நன்மை ஏற்படும். இரவு நேரப் பயணத்தை மட்டும் தவிர்க்கவும்.
விருச்சிகம்: யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். எதிர்பாராத செலவுகள் கவலையைத் தரும். முக்கிய பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். நெருங்கிய நண்பர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு: எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் புதிய நபரால் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தந்தையின் பேச்சைக் கேட்டு நடந்துகொள்ளவும்.
மகரம்: அனைவரிடமும் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். நீண்ட நாள் கஷ்டத்திற்குப் பலன் கிடைக்கும் நாள். உறவினர்களிடையே இருந்து வந்த பிரச்சனை நீங்கும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்து வைப்பீர்கள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளலாம்.
கும்பம்: இன்று உங்களுக்குத் தொட்டது துலங்கும் நாள். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சிலர் நல்ல விஷயங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயத்தில் நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுவர வாய்ப்புண்டு.
மீனம்: பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாகக் காரியங்கள் சாதகப் பலனைத் தரும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். குளிர்ந்த உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். முதியோர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும்.