இன்றைய ராசிபலன் (25-08-2023)

68698பார்த்தது
மேஷம்: இன்று உங்களுக்கு பொறுமையான அணுகுமுறை தேவை. திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். அலுவலக சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. கணவன் - மனைவிக்கு இடையே வீட்டில் சில கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வெளியூர் பயணத்தின் போது சில இழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமணம் விஷயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்படும். ரிஷபம்: இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்களை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். கையில் பணம் போதுமானதாக இருக்கும். முதலீடு போன்றவற்றை இன்று தொடங்கலாம். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஒரு நாளாக இன்றைய நாள் அமையாது. சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் மிகவும் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். முதியவர்களுக்கு மூட்டு மற்றும் முதுகுவலி காணப்படும். மன அமைதிக்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். நேரம் கிடைத்தால் விநாயகர் கோயிலுக்கும் சென்று வாருங்கள். கடகம்: இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உங்களின் கவலை அதிகரிக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிடுவது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிம்மம்: இன்று உங்களுக்கு சகோதரன், சகோதரி ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கன்னி: உங்களின் தாயிடம் உங்களுக்கு இருந்த வந்த சண்டை நீங்கும். நண்பர்களிடம் கொடுத்த பணம் திருப்பி வரும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள். துலாம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பான மன நிலையில் காணப்படுவீர்கள். வியாபாரிகளுக்கு நிதி நிலைமை முன்னேற்றகரமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் அதிகமாக இருக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். விருச்சிகம்: மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த முயற்சிகளை எடுக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்லவும். தனுசு: இன்று உங்களுக்கு மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். காதலர்கள் திருமணத்திற்கான முயற்சிகளை தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். மகரம்: இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படும். பணியிடத்தில் தேவையில்லாமல் அடுத்தவர்கள் வேலையில் தலையிட வேண்டாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடக்கும். கும்பம்: இன்று உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பாராத சில பயணம் மூலம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு இன்று பணவரவிற்கான வாய்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். மீனம்: வீட்டில் பெற்றோரிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் முனைவோருக்கு வியாபாரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். குடும்ப உறுப்பினர்களால் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரித்துக் காணப்படும்.

தொடர்புடைய செய்தி