மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் குறைவாக காணப்படும். இருப்பினும் நம்பிக்கையுடனும் உற்சாகமாகவும் நாள் முழுவதும் காணப்படுவீர்கள். இன்று உங்களிடம் பணப்புழக்கம் குறைவாக காணப்படும். சிலருக்கு மன அழுத்தம் காரணமாக உடல் சோர்வாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தை தடைபடும்.
ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் காரியங்களை உறுதியுடனும் கவனமான முறையிலும் செய்ய வேண்டும். அலுவலகத்தில் அதிகப் பணிகள் காரணமாக உங்களால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். சிலருக்கு சளி இருமல் போன்ற ஒவ்வாமை நோய்கள் பாதிப்பு இருக்கும்.
மிதுனம்: இன்று நீங்கள் உங்கள் திறமைகளை மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்த வாய்ப்பு நிறைந்த அற்புதமான நாள். கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: உங்கள் வாழ்வின் மிக முக்கியமான
முடிவுகள் எடுப்பதற்கு இன்று மிகவும் சிறந்த நாள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வர வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகமாக காணப்படும். குழந்தைகளின் உடல்நலம் சற்று பாதிக்கப்படும்.
சிம்மம்: இன்று நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். வீட்டில் கணவன் - மனைவி இடையே பண விஷயத்தில் சில சண்டைகள் ஏற்படும். குடும்ப தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கன்னி: இன்று உங்களுக்கு எதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படாது. இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். உங்களுடைய அலட்சிய போக்கால் பண இழப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். தொழிலில் பெரிய லாபம் இருக்காது.
துலாம்: இன்று உங்களுக்கு நம்பிக்கையான வெற்றிகரமான ஒரு நாளாகும். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் தாராளமாக எடுக்கலாம். குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். பண வரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியமும் சிறந்து விளங்கும்.
விருச்சிகம்: இன்றைய நாள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு நாள். திருமண வயதில் உள்ள ஆண், பெண்ணுக்கு நல்ல வரன் அமையும் சூழல் உருவாகும். உங்கள் அன்பான அணுகுமுறை உங்கள் மனைவி உங்களை நன்கு புரிந்து கொள்ள உதவும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குதல் போன்ற சுபகாரியங்கள் கைகூடி வரும்.
தனுசு: மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அதிகமாக பணப்புழக்கம் இருக்காது, திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலக பணி காரணமாக சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படும். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும். பெற்றோர்களின் உடல்நிலை பாதிக்கப்படும்.
மகரம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சிலருக்கு குடும்பத்தில் பிரச்னைகள் இருக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்காது. மருத்துவ தேவைகளுக்காக நீங்கள் சில அதிகமாக செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தால் மகிழ்ச்சி பெருகும்.
கும்பம்: இன்று உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆரோக்கியம் நலல முறையில் காணப்படும். நீங்கள் மன உறுதியுடன் திடமாக காணப்படுவீர்கள். குல தெய்வ வழிபாடு போன்ற நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சுபகாரியங்கள் நடக்கும் சூழல் உருவாகும்.
மீனம்: இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக நீங்கள் சில திடீர் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். 60 வயதை கடந்தவர்களுக்கு கால்கள் மற்றும் மூட்டுக்களில் திடீரென வலிகள் தோன்றலாம். சிலர் வீட்டுத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.