இந்தியாவின் முப்படைகளில் விமானப்படை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் அக்டோபர் 8, 1932-ம் ஆண்டு இந்திய வான் படை உருவாக்கப்பட்டது. 2-ம் உலகப்போரில் இந்தியா ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் 1945-ம் ஆண்டு ‘ராயல்’ என்கிற வார்த்தை சேர்க்கப்பட்டது. 1950-ல்’ ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்’ இந்திய விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இந்தியாவை பாதுகாப்பதை கடமையாகக் கொண்டது.