இன்று சர்வதேச சதுரங்க நாள்

85பார்த்தது
இன்று சர்வதேச சதுரங்க நாள்
சர்வதேச சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 20-ம் நாள் கொண்டாடப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-ல் நிறுவப்பட்டது. இந்த நாளை சர்வதேச சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதையடுத்து, ஜூலை 20-ம் நாள் சர்வதேச சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி