1960-ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்த சில்க் ஸ்மிதா வெறும் 4ம் வகுப்பு மட்டுமே படித்தார். பின்னர் திரையுலகில் இளம் வயதில் நுழைந்த அவர் துணை நடிகையாகவும் ட்ரூப் டான்ஸராகவும் பணியாற்றினார். அதனை தொடர்ந்து கதாநாயகியாகவும், கவர்ச்சி வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இன்று (செப். 23) அவரின் 28ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.