தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) தலைவராக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "எஸ்.கே.பிரபாகர் இன்றில் இருந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அல்லது அவர் 62 வயது அடையும் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக தொடர்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.