டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடக்கம்

80பார்த்தது
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடக்கம்
8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. லீக் போட்டிகள் ஜூலை 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ந் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி