கார்களில் கட்சி கொடி கட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

84பார்த்தது
கார்களில் கட்சி கொடி கட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
தனியார் வாகனங்களில், 'காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் 'ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது மற்றும் கார்களில் கட்சிக்கொடி கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 14) நடந்தது. அப்போது, விசாரணையை, ஜூலை 2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி கூறியதாவது, ”கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கப்பட்டும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டிய கார்கள் வலம் வருகின்றன.

கார்களில் இன்னும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ”கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி