தீ பரவுவதாக வதந்தி.. ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

50பார்த்தது
தீ பரவுவதாக வதந்தி.. ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலம் சசரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்டுள்ளது. அப்போது ரயிலில் தீ பரவுவதாக ரயில் ஒட்டுநருக்கு செல்போனில் தகவலளிக்கப்பட்டிருக்கிறது. இதனை நம்பிய ஓட்டுநர், ரயிலை குமண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தினார். இந்த தகவல் பயணிகளுக்கும் பரவியுள்ளது. இதனால் பயந்துபோன பயணிகள் ரயிலில் இருந்து குதித்து ஓடியுள்ளனர். அப்போது எதிரே வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியதியுள்ளது. தற்போதுவரை 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடடைந்துள்ளனர். பின்னர் விசாரணையில் அவ்வாறு தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி