கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 7 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் ஒரு கல்லூரி மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் குனியமுத்தூரில் உள்ள தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து புகாரின்பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.