திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் பகுதிகளில் அரசு அனுமதியின்றி பார் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் நர்மா கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகில் குமார் என்பவரது மனைவி கோசலை( வயது 36), அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி சூர்யா (வயது 33) சோலை கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகில் அரசு அனுமதியின்றி பார் நடத்திய கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபு ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.