உலகில் உயர்ந்த சக்தி என்றால் அது உழவர் சக்தி தான். அதனால், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “அதன் மூலம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நடத்தவிருக்கும் சென்னை முற்றுகைப் போராட்டத்தை தவிர்ப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது” என்றார். இதற்காக தேசிய, மாநில அளவிலான உழவர் அமைப்புகளின் ஆதரவு கோரப்படும்.