போளூர் - Polur

போளூர்: ஆடு சந்தை வியாபாரிகள் வருகை குறைவு.. விற்பனை சுமார்

போளூர்: ஆடு சந்தை வியாபாரிகள் வருகை குறைவு.. விற்பனை சுமார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பழமையான ஆடு சந்தை வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் திங்கள்கிழமையான இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இச்சந்தையில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, வந்தவாசி, செங்கம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் மற்றும் விவசாயிகளும் தங்கள் ஆடுகளை விற்பனைக்காகவும், வாங்குவதற்காகவும் வந்திருந்தனர். இந்நிலையில் ஆடுகளின் விலை உயர்வால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

திருவண்ணாமலை