இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

63பார்த்தது
இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குகள் மதிப்பில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. நண்பகல் நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 1,342.23 புள்ளிகள் சரிந்து 78,381.88 ஆக இருந்தது. இதே வேளையில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் என்எஸ்இ நிஃப்டி 451.55 புள்ளிகள் சரிந்து 23,852.80 ஆக இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி