திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தா்மராஜா கோயிலில் திரளான பெண்கள் நோன்பு படையலிட்டு வழிபட்டனா்.
இந்தக் கோயிலில் உள்ள கேதாரி அம்மனுக்கு அமாவாசையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் நோன்பு சட்டியில் நோன்பு கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை எடுத்துச் சென்று அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனா்.