"ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது. நாங்களும் உதவி செய்துவருகிறோம். எனினும், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ சுற்றளவில் வேறு விமான நிலையம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தம் சவாலாக உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு, விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கவேண்டும்" என விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.