அமெரிக்காவின் 'பாஸ்டன் சயின்டிபிக்' நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கருவியின் பெயர் 'வாட்ச்மேன்'. முறையற்ற இதயத்துடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு பக்கவாதம் தாக்கும் அபாயம் உள்ளதோடு ரத்தக்குழாய்களில் ரத்தம் உறையும் ஆபத்தும் உண்டு. இதற்காக இதயத்தில் பொருத்திக் கொள்ளும் கருவியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனையில் 'வாட்ச்மேன்' பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.