தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்போது மதுபானம் MRP விலைகளில் விற்கப்படுகிறது. இந்நிலையில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், மது வகைகளுக்கு இனி கூடுதலாக ரூ.10 வசூலிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக ரூ.10 கொடுத்து மது பாட்டிலை பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்டு பின்னர் காலி பாட்டிலை திரும்ப டாஸ்மாக் காண்ட்ராக்டர் கடைகளில் அளித்தால் ரூ.10 திரும்ப அளிக்கப்படும் என கூறப்படுகிறது.