முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜன.6 தொடங்கி ஜன.11 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.