பணிநிரந்தரம், சம ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு வயது அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 11ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் ஊழியர்கள் தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போராட்டத்தை நடத்த AITUC சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும், முதலில் சென்னையிலும், பிறகு மற்ற மண்டலங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.