சூரியகாந்தி விதைகள் பொதுவாக சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நல்ல சுவையுடைய இதன் பருப்புகளை மென்று சாப்பிடலாம். நியாசின், வைட்டமின் இ சூரிய காந்தி விதையில் அதிகம் உள்ளன. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.