தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தங்கு தடையின்றி ஆவின் பால் மற்றும் பால் வினியோகத்தை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களில் இன்றே மீட்புப் படகுகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.