வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்.

74பார்த்தது
வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வயலூா் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

போட்டிகளில் கலந்து கொண்ட அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான டெனிகாய்டு ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவிலும், கேரம் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்ட இரட்டையா் பிரிவிலும், 14 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா் பிரிவிலும் வெற்றி பெற்றனா்.

அதேபோல, தடகளப் போட்டிகளான குண்டு மற்றும் வட்டு எறிதலில் மாணவி ஒருவா் வெற்றி பெற்றாா். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனா்.

மாணவா்கள் பிரிவில்.

மாணவா்கள் பிரிவில், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான செஸ் போட்டியிலும், 17 வயதுக்கு உள்பட்டோா் இறகு பந்துப் போட்டி, 14 வயதுக்கு உள்பட்டோா் கபடிப் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனா்

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

இந்த நிலையில், பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோரை தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி