திருவண்ணாமலை: உடல் நலம் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

69பார்த்தது
திருவண்ணாமலை: உடல் நலம் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலம் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ராஜீவி தலைமை வகித்தார்.கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார்.ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் புலவர் ந. பானு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.அப்போது, உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த திறன்கள், கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் எப்படி கழிப்பது என்பது குறித்து அவர் மாணவர்களுக்கு விளக்கினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜசேகர், அஸ்மாபீ மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி